உலகம்

நிலவிலிருந்து கற்களை எடுத்து வருவதற்கானவிண்கலம்: வெற்றிகரமாக செலுத்தியது சீனா

DIN

நிலவிலிருந்து கல், மண் ஆகியவற்றைத் தோண்டியெடுத்து, ஆய்வுக்காக அதனை பூமிக்கு எடுத்து வருவதற்கான விண்கலத்தை சீனா செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக செலுத்தியது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

நிலவில் ஆய்வகள் மேற்கொள்வதற்கான சீனாவின் சாங்கி-5 விண்கலம், ஹய்னான் மாகாணத்திலுள்ள வெங்சாங் ஏவுதளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக ஏவப்பட்டது.

நிலவில் 20 நாள்களில் வலம் வரவிருக்கும் இந்த விண்கலம், அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக இத்தகைய திட்டத்தை சீனா 50 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியுள்ளது. சீனாவின் விண்வெளி திட்டங்களிலேயே இது மிகவும் சிக்கலானதும் தோல்விக்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டதாகவும் அந்த நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

வரும் 27-ஆம் தேதிக்குப் பிறகு நிலவை அடையும் சாங்கி-5 விண்கலம், நிலவில் மாதிரிகளை சேகரித்துக் கொண்டு அடுத்த மாதம் 16 அல்லது 17-ஆம் தேதி பூமிக்குத் திரும்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT