உலகம்

அமெரிக்க தேவாலயத்தில் கத்திக்குத்து: இருவர் பலி

DIN


சான் ஜோஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், சான் ஜோஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

 சான் ஜோஸ் நகரில்  உள்ள கிரேஸ் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த ஆதரவற்றவர்களை மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடைபெற்றபோது தேவாலயத்தில் ஆராதனைகள் எதுவும் நடைபெறவில்லை.

இது தொடர்பாக சான் ஜோஸ் நகர மேயர் சாம் லிக்கார்டோ தெரிவிக்கையில், மர்ம நபரின் சரமாரியான கத்திக் குத்து தாக்குதலில் தேவாலயத்தில் இருவர் உயிரிழந்தனர் என்றார்.

மேலும் பலர் பலத்த காயமடைந்தனர் என்றும், அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

 முன்னதாக, கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் நபர் கைது செய்யப்பட்டதாக மேயர் தனது சுட்டுரையில் தெரிவித்திருந்தார். பின்னர் அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவு!

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

SCROLL FOR NEXT