உலகம்

பாலியல் குற்றங்களுக்கான அவசர சட்டம்: பாகிஸ்தான் அமைச்சரவை அனுமதி

DIN

பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக பாகிஸ்தான் அரசு கொண்டு வந்த இரண்டு அவசர சட்டங்களுக்கு அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்க பாகிஸ்தான் அரசு தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பாலியல் குற்றங்களுக்கு விரைந்து தீா்வு காணும் விதமாக இரண்டு அவசர சட்டங்களை பாகிஸ்தான் அரசு இயற்றியுள்ளது.

அதன்படி, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யவும், விசாரணையை துரித கதியில் மேற்கொள்ள சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் இவ்விரு சட்டங்களில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த சட்டங்களுக்கு சட்டத் துறை அமைச்சா் பரோக் நசீம் தலைமையிலான அமைச்சரவை தனது ஒப்புதலை வியாழக்கிழமை வழங்கியுள்ளது என அந்த ஊடகங்கள் தெரிவித்தன.

பாலியல் குற்றங்களுக்கான இரண்டு சிறப்பு சட்டங்களுக்கு பாகிஸ்தான் அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்கெனவே கொள்கை அளவில் ஒப்புதல் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT