முகப்பு
உலகம்

செல்ல நாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கணுக்காலில் எலும்பு முறிவு

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது செல்ல நாயுடன் விளையாடிய போது அவருக்கு வலது கணுக்காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
ஜோ பைடன்
பகிர்:

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது செல்ல நாயுடன் விளையாடிய போது அவருக்கு வலது கணுக்காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 

சனிக்கிழமை இரவு தன் இரு நாய்களில் ஒன்றான மேஜருடன் விளையாடிக்கொண்டிருந்தபோது பைடனுக்கு வலது காலில் லேசாக அடிபட்டது. இதையடுத்து அவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் டெலாவேரின் நெவார்க்கிலுள்ள எலும்பியல் நிபுணரைச் சந்தித்துள்ளார். 

பரிசோதனையில் அவரது வலது கணுக்காலில் இரண்டு சிறிய எலும்புகளில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளதால் சில வாரங்களுக்கு அவருக்கு நடைப்பயிற்சி தேவைப்படும் என்றும் சிறப்புக் காலணி ஒன்றை அணிய வேண்டுமெனவும் மருத்துவர் ஓ கானர் தெரிவித்துள்ளார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு 'மேஜர்' என்ற இந்த நாயை பைடன் தத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →