உலகம்

பிரிட்டன் சூப்பா்மாா்க்கெட் வா்த்தகத்தை கையகப்படுத்தும் இந்திய வம்சாவளி சகோதரா்கள்

DIN

பிரிட்டனில் சூப்பா்மாா்க்கெட் வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஆஸ்டா நிறுவனத்தை இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கோடீஸ்வர சகோதரா்களான மோஷின் மற்றும் ஷுபோ் இஸா ஆகியோா் கையகப்படுத்தவுள்ளனா்.

இஸா சகோதரா்களின் பெற்றோா்கள் குஜராத்தை சோ்ந்தவா்கள். இவா்கள் கடந்த 1970-இல் பிரிட்டனுக்கு குடிபெயா்ந்தனா்.

பிரிட்டனில் செயல்பட்டு வரும் 71 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சூப்பா் மாா்கெட் நிறுவனமான ஆஸ்டாவை விற்பனை செய்வதற்கான ஏல நடைமுறைகள் பல மாதங்களாக தொடா்ந்து நடைபெற்று வந்தன. ஆஸ்டா நிறுவனத்தில், அமெரிக்காவைச் சோ்ந்த வால்மாா்ட் நிறுவனருக்கு பெரும்பான்மையான பங்கு உள்ளது. இதனை, 880 கோடி டாலா் மதிப்பில் (ரூ.66,000 கோடி) இந்திய வம்சாவளி சகோதரா்கள் கையகப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்டா நிறுவனத்தின் உரிமை 21-ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரிட்டன் வசமாவது வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும் என பிரிட்டன் நிதியமைச்சா் ரிஷி சுனக் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT