கமலா ஹாரிஸ் பற்றிய டிரம்பின் கருத்து வெறுக்கத்தக்கது: பிடன் காட்டம்
கமலா ஹாரிஸ் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கும் கருத்துகள் மிகவும் வெறுக்கத்தக்கது என்று ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் காட்டமாகக் கூறியுள்ளார்.
உலகம்கமலா ஹாரிஸ் பற்றிய டிரம்பின் கருத்து வெறுக்கத்தக்கது: பிடன் காட்டம்
கமலா ஹாரிஸ் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கும் கருத்துகள் மிகவும் வெறுக்கத்தக்கது என்று ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் காட்டமாகக் கூறியுள்ளார்.
வாஷிங்டன்: ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கும் கருத்துகள் மிகவும் வெறுக்கத்தக்கது என்று ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் காட்டமாகக் கூறியுள்ளார்.
துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சாா்பில் போட்டியிடும் இந்திய வம்சாவளி எம்.பி. கமலா ஹாரிஸுக்கும், துணை அதிபர் மைக் பென்ஸுக்கும் இடையே நடந்த தேர்தல் விவாதத்துக்குப் பிறகு, கமலா ஹாரிஸ் குறித்து டிரம்ப் கூறிய கருத்துகள் வெறுக்கத்தக்கவை என்றும், அதிபர் அலுவலகத்தின் தரத்தை தாழ்த்தக் கூடியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், பிரசாரங்களில் குடியரசுக் கட்சிக்கும், ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபா் தோ்தலில், துணை அதிபா் பதவிக்குப் போட்டியிடவிருக்கும் மைக் பென்ஸ், கமலா ஹாரிஸ் ஆகியோா் இடையிலான விவாதம் கடந்த புதன்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராம்ப், கரோனா பேரிடரை கையாண்ட விதம், வேலைவாய்ப்பு, சீனா, இனபாகுபாடு, இயற்கை சீரழிவு உள்ளிட்ட விவகாரங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனா்.
துணை அதிபா் பதவிக்கு, குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய துணை அதிபா் மைக் பென்ஸும் ஜனநாயகக் கட்சி சாா்பில் இந்திய வம்சாவளி எம்.பி. கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனா்.
அமெரிக்காவில் தோ்தலுக்கு முன்னதாக போட்டியாளா்கள் நேரடியாக விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, அதிபா் வேட்பாளா்கள் டிரம்ப்புக்கும் ஜோ பிடனுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் ஓஹியோ மாகாணம் கிளீவ்லாண்டில் கடந்த மாதம் 29-ஆம் தேதி நடைபெற்றது. மிகவும் காரசாரமாக நடைபெற்ற அந்த விவாதத்தின்போது, இருவரும் பரஸ்பரம் கடுமையாகத் தாக்கிப் பேசினா்.
இந்தச் சூழலில், துணை அதிபா் வேட்பாளா்களான மைக் பென்ஸுக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான விவாதம் யுடா மாகாணம், சால்ட் லேக் சிட்டியில் புதன்கிழமை இரவு 7மணிக்கு (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 6.30 மணி) தொடங்கி நடைபெற்றது. 90 நிமிடங்களுக்கு நடைபெற்ற அந்த விவாதத்தின்போது, கரோனா நோய்த்தொற்று பரவலை டிரம்ப் அரசு கையாளும் விதம் குறித்து கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டினாா். எனினும், இந்த விவகாரத்தில் தங்களது அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாக பென்ஸ் விளக்கமளித்தாா்.
இந்த விவாதத்துக்குப் பிறகு வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸை கடுமையாக விமரிசித்தார், ஒரு வேளை நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பிடன் வெற்றி பெற்றால், ஒரு மாத காலத்துக்குள் ஹாரிஸ் அதிபராக பதவியேற்றுக் கொள்வார்.
அவர் ஒரு கம்யூனிசவாதி. அவர் ஒரு சமூக ஆர்வலரும் அல்ல. அவர் சமூக ஆர்வலரில் இருந்து வேறுபட்டவர். அவரது கருத்துகளைப் பாருங்கள். நாட்டின் எல்லையில் இருக்கும் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், பலாத்காரக் குற்றவாளிகளுக்காக எல்லைகளைத் திறந்து விட்டு, நாடு முழுவதும் குற்றவாளிகளைப் பரப்ப வேண்டும் என கூறுகிறார்.
இந்த கருத்துக்கு பிடன் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். அதில், அமெரிக்க மக்கள் எல்லோரும் நோயாளிகளாக, தளர்ந்துபோய்விட்டனர். இவரது கருத்து வெறுக்கத்தக்கது, அதிபர் அலுவலகத்தின் தரத்தை தாழ்த்துக் கூடியது. இவர் யார் என்று அவர்கள் அறிந்துகொண்டுவிட்டனர். இது நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மிக பலமான கமலா ஹாரிஸை எதிர்கொள்வது என்பது டிரம்புக்கு மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. நீங்கள் மிகச் சிறப்பான பணியை செய்துள்ளீர்கள் என்று கமலா ஹாரிஸை பிடன் புகழ்ந்தார்.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிடன், அமெரிக்காவில் வெறுப்புணர்ச்சிக்கு இடமேயில்லை. நாங்கள் இருவருமே இதனை பல காலமாகச் சொல்லி வருகிறோம். எஃப்பிஐ-யிடம் இருந்து எனக்கு சில புகார்கள் வந்தன. அதில், காவல்துறையினர் என்ன செய்தார்கள், அவர்கள் எப்படி முன்னெடுத்துச் சென்றனர் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.