லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரத்தில் டீசல் தொட்டி வெடித்ததில் 4 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
லெபனான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள நகரம் தாரிக் ஜாதிதா. இங்கு வெள்ளிக்கிழமை இரவு ஒரு பேக்கரிக்குள் திடீரென பலத்த சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.
இதனையொட்டி உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு கட்டிடத்திற்குள் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். எனினும் இந்த விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளதாகவும் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேக்கரியில் இருந்த டீசல் தொட்டி மூலம் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்ரூட் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் 200 பேர் பலியாகினர். மேலும் 6500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.