நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்கர்கள் ஜோ பிடனுக்கு வாக்களிக்குமாறு ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கோரியுள்ளார்.
காலநிலை மாற்றத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வருபவர் ஸ்வீடனைச் சேர்ந்த 17 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க். இவர் காலநிலை மாற்றத்தால் ஏற்படப் போகும் பல்வேறு பாதிப்புகள் குறித்து உலக அரங்கில் பேசி வருகிறார்.
இந்நிலையில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவதற்கு தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு பதிலாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனுக்கு வாக்களிக்குமாறு அமெரிக்க குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தனது சுட்டுரைப் பதிவில், “நான் ஒருபோதும் கட்சி அரசியலில் ஈடுபடுவதில்லை. ஆனால் வரவிருக்கும் அமெரிக்கத் தேர்தல் எல்லாவற்றிற்கும் மேலானவை. ” என தன்பெர்க் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பதிவில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடனுக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
கிரேட்டா தன்பெர்க்கின் காலநிலை மாற்ற எச்சரிக்கைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து நிராகரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான சயின்டிஃபிக் அமெரிக்கன் நவம்பர் 3 ஆம் தேதி ஜோ பிடனுக்கு வாக்களிக்குமாறு தனது வாசகர்களை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.