முகப்பு
உலகம்

ஜெர்மனியில் புதிதாக 3,483 பேருக்கு கரோனா பாதிப்பு

ஜெர்மனியில் இன்றைய நிலவரப்படி புதிதாக 3,483 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 12 அக்டோபர், 2020 at 12:07 PM
Germany reports 3,483 more COVID-19 cases
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM

ஜெர்மனியில் இன்றைய நிலவரப்படி புதிதாக 3,483 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினசரி பாதிப்பு குறித்து அந்த நாட்டு சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலில், 

நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில், ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,483 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 3,25,331 ஆக உயர்ந்துள்ளதாக ராபர்ட் கோச் நிறுவனம் (ஆர்.கே.ஐ) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் நோய்த் தொற்று பாதித்து 6 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 9,621 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதித்து இதுவரை 2,74,700 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். தொற்று காரணமாக 41,889 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.