பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 713 பேர் பலி, 28,523 பேருக்குத் தொற்று
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 713 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 1,52,460 ஆக உயர்ந்துள்ளது.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 713 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 1,52,460 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,523 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து, மொத்த பாதிப்பு 5,169,386 ஆக உள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சர் பேபியோ பாரியா கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பிரேசில் அமைச்சரவையில் பதினொன்றாவது உறுப்பினருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட சாவ் பாலோவில் இதுவரை 10,51,613 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 37,690 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.