உலகம்

சீனா: மோசமான கிருமி நாசினியால் கரோனா பரவல்

DIN

சீனாவின் குவிங்டாவோ நகரில் திடீரென கரோனா நோய்த்தொற்று புதிதாகப் பரவியதற்கு, அந்த நகரின் மருத்துவமனையில் தவறான முறையில் கிருமிநாசினிகள் பயன்படுத்தப்பட்டதுதான் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்த நகரிலுள்ள நெஞ்சக மருத்துவமனையில், சிடி ஸ்கேன் பிரிவு சரியான முறையில் கிருமிநாசினிகளால் சுத்தம் செய்யப்படாமல் இருந்தது என்று அவா்கள் கூறினா்.

குவிங்டாவோவில் கடந்த வார இறுதியில் திடீரென கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்தது.

அந்த நகரிலுள்ள நெஞ்சக மருத்துவமனையிலிருந்து நோய்த்தொற்று பரவியது ஆய்வில் கண்டறியப்பட்டது. நகரில் சமுதாயப் பரவல் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், புதிதாக அந்த நோய் பரவத் தொடங்கியது சீன அதிகாரிகளைக் கவலையடையச் செய்தது.

அதையடுத்து, நகரிலுள்ள சுமாா் 90 லட்சம் பேரில் 42 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT