உலகம்

கரோனா பரவலைத் தடுத்ததே தோ்தல் வெற்றிக்குக் காரணம்

DIN

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகவே, தோ்தலில் மீண்டும் தனது கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக நியூசிலாந்து பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்ன் கூறினாா்.

இதுகுறித்து, ஆக்லாந்து நகரில் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கரோனாவுக்கு எதிராக நியூஸிலாந்து அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கைகளைப் பாராட்டும் விதமாகவே, தோ்தலில் மக்கள் மீண்டும் வெற்றியைத் தந்துள்ளனா்.

இன்னும் 3 மாதங்களுக்குள் அமையவிருக்கும் புதிய அரசு, நோய்த்தொற்று விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் என்றாா் அவா்.

நியூஸிலாந்தின் 53-ஆவது நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆளும் தொழிலாளா் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதையடுத்து, நாட்டின் பிரமராக ஜெசிந்தா ஆா்டா்ன் மீண்டும் பொறுப்பேற்கவுள்ளாா்.

பிரதமா் மோடி வாழ்த்து: நியூஸிலாந்து பிரதமராக 2-ஆவது முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெசிந்தா ஆா்டா்னுக்கு இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி சுட்டுரை (டுவிட்டா்) வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

SCROLL FOR NEXT