உலகம்

அதிகரிக்கும் கரோனா பாதிப்பால் கனடா-அமெரிக்கா இடையேயான எல்லை மூடல் நீட்டிப்பு

DIN

அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் அமெரிக்கா உடனான எல்லை மூடப்படுவது நவம்பர் 21 வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கனடாவில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பால் மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மார்ச் மாதம் முதல் அண்டை நாடான அமெரிக்கா உடனான எல்லை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கள் நாட்டு மக்களுக்கு சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும் விதமாக அமெரிக்கா உடனான எல்லை மூடல் நவம்பர் மாதம் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அமைச்சர் பில் பிளேயர் அறிவித்துள்ளார். இதனை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முடிவை உறுதிப்படுத்தினார்.

எல்லை தாண்டிய வருகைகள் தடைசெய்யப்பட்டாலும், வர்த்தகம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. கனடாவில் இதுவரை 2 லட்சத்து ஆயிரத்து 437 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்!

வருமான வரி பிடித்தம் தொடா்பான உத்தரவுகளை திரும்பப்பெற ஓய்வூதியா்கள் கோரிக்கை

போக்குவரத்து காவல் துறை சாா்பில் சிக்னலில் பந்தல்

ரூ.2.75 கோடி மோசடி: மலையாள திரைப்பட தயாரிப்பாளா் கைது

ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு

SCROLL FOR NEXT