உலகம்

நிலநடுக்கத்தின் மத்தியில் நேர்காணலைத் தொடர்ந்த ஐஸ்லாந்து பிரதமர்

DIN

ஐஸ்லாந்து பிரதமர் கேத்ரின் ஜாக்கோப்ஸ்டோடிர் கரோனா தொற்றால் சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் அளித்துக் கொண்டிருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல தனியார் செய்தி நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கரோனா தொற்று குறித்த நேர்காணலில் ஐஸ்லாந்து பிரதமர் கேத்ரின் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அவரது வீடு குலுங்க ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கேத்ரின் தான் பேசிவதை நிறுத்தினார். சில விநாடிகளிலேயே இயல்பு நிலை திரும்பியதால் அவர் தனது நேர்காணலை தடையின்றி முடித்தார். 

“இப்போது இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனது வீடு குலுங்குகிறது.” எனத் தெரிவித்த பின் சிரித்துக்கொண்டே தனது நேர்காணலை அவர் நிறைவு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1000 கோடி எதிர்பார்ப்பில் புஷ்பா - 2 படக்குழு!

திருமணம் எப்போது? - ராகுல் காந்தி பதில்

2025-ல் பறக்கும் டாக்ஸி: ஆனந்த் மஹிந்திரா நம்பிக்கை!

பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் 7 அணிகள்... முன்னாள் ஆஸி. வீரர் கூறுவதென்ன?

அண்ணாமலையை கைது செய்ய உத்தரவு? ஆளுநர் மாளிகை விளக்கம்

SCROLL FOR NEXT