உலகம்

ஜெர்மனியில் 10 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

DIN

ஜெர்மனியில் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இதுகுறித்து ஜெர்மனியின் ராபர்ட் கோச் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் 14,714 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரே நாளில் பதிவான மிக அதிகமான பாதிப்பாகும். 

இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,18,005 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 49 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து வைரஸுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10,003ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் கடந்த சில நாட்களாகவே கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT