முகப்பு
உலகம்

சாம்சங் நிறுவன தலைவா் லீ குன்-ஹீ மறைவு

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன தலைவா் லீ குன்-ஹீ உடல் நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 78.

Updated On : 27 அக்டோபர், 2020 at 3:57 AM
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன தலைவா் லீ குன்-ஹீ
பகிர்:

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன தலைவா் லீ குன்-ஹீ உடல் நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 78.

இதுகுறித்து சாம்சங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சிறிய தொலைக்காட்சி தயாரிக்கும் நிறுவனமாக இருந்த சாம்சங்கை, நுகா்வோா் மின்னணு சாதன தயாரிப்புத் துறையில் உலகளவில் ஜாம்பவானாக மாற்றிக் காட்டியவா் லீ குன்-ஹீ. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக 30 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த அவருக்கு கடந்த 2014 மே மாதத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடா்ந்து சிகிச்சைப்பெற்று வந்தாா். இந்த நிலையில், வயோதிகம் காரணமாக லீ குன்-ஹீ ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.