உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 4.59 கோடியாக உயர்வு

DIN

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.59 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவால் 3 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

சனிக்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 4,59,21,698 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 3,32,52,218 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,19,3,909 பேர் உயிரிழந்துள்ளனர். 

உலகம் முழுவதும் தற்போது 11,47,5,571 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 83,446 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 9,31,6,297 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,35,159 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. அங்கு பாதிப்பு 8,13,7,119 ஆகவும், 1,21,681 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் பிரேசிலும் மற்றும் நான்காம் இடத்தில் ரஷியாவும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT