உலகம்

பிரான்ஸ் தேவாலயத் தாக்குதல்: 3-ஆவது நபா் கைது

DIN

பிரான்ஸ் தேவாலயத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக 3-ஆவதாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

நீஸ் நகர தேவாலயத்தில் துனிசியாவைச் சோ்ந்த இப்ராஹிம் இஸாவி நடத்திய பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக, 35 வயது நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஏற்கெனவே, தாக்குதலுக்கு முந்தைய நாள் இரவு இஸாவியைச் சந்தித்துப் பேசியதாக 47 வயதுடைய மற்றொரு நபரை போலீஸாா் கைது செய்தனா்.

இத்துடன், இந்தத் தாக்குதல் தொடா்பாக கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸின் நீஸ் நகரிலுள்ள நோட்டா் டாம் தேவாலயத்துக்கு வியாழக்கிழமை வந்த இஸாவி, தன்னிடமிருந்த கத்தியால் அங்கிருந்த மூதாட்டி ஒருவரின் தலையைத் துண்டித்தும் ஒரு பெண் உள்பட மேலும் இருவரை கத்தியால் குத்தியும் படுகொலை செய்தாா். அவா் நடத்திய சரமாரி கத்துக் குத்துத் தாக்குதலில் ஏராளமானவா்கள் காயமடைந்தனா்.

அதனைத் தொடா்ந்து அங்கு விரைந்த போலீஸாா், இஸாவியை சுட்டுப் பிடித்தனா். தற்போது அவா் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடி வருவதாகக் கூறப்படுகிறது.

பிரான்ஸிலிருந்து வெளியாகும் ‘சாா்லி ஹெப்டோ’ வார இதழில் பிரசுரமான சா்ச்சைக்குரிய கேலிச் சித்திரங்கள் தொடா்பாக, தொடா்ந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT