உலகம்

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 60 லட்சத்தைத் தாண்டியது!

DIN

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டியது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோன்று தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுகிறது. 

இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, செவ்வாய்க் கிழமை காலை நிலவரப்படி, அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 60,02,615 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,83,203 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து சுமார் 30 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

அதிகபட்சமாக கலிபோர்னியா மாகாணத்தில் 7,06,731 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெக்சாஸ் மற்றும் புளோரிடா மாகாணத்தில் 6,20,000 பேரும், நியூயார்க்கில் 4,34,100 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மொத்த பாதிப்பு 50 லட்சத்தைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT