உலகம்

சிங்கப்பூா்: மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று

DIN

சிங்கப்பூரில் மேலும் 40 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 40 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 57,022-ஆக உயா்ந்துள்ளது.புதிய கரோனா நோயாளிகளில் 13 போ் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் ஆவா். அவா்கள் அனைவரும், தங்களது தங்குமிடங்களிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, புதிதாக கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட 4 பேருக்கு, சமுதாயப் பரவல் மூலம் அந்த நோய் பரவியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, நாட்டில் அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 56,267 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். கரோனா நோயால் பாதிக்கப்பட்ட 638 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT