உலகம்

கரோனா தொற்று: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,209 பேர் பலி 

DIN



வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,209 பேர் உயிரிழந்தனர். இதனால் நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 1 லட்சத்து 95 ஆயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,244 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 65,49,475-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 1,209 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,95,239 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்கு 25,08,141 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர், இதுவரை 38,46,095 பேர் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர், 

நாட்டிலேயே அதிகபட்சமாக கலிஃபோா்னியா மாகாணத்தில் 7,47,991 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது, 13,990 பேர் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக டெக்ஸாஸில் 6,77,890 பேரும், புளோரிடாவில் 6,52,148 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பலி எண்ணிக்கையை பொறுத்தவரை நியூயார்க் மாகாணம் முதலிடத்தில் உள்ளது. 33,105 பேர் உயிரிழந்துள்ளனர், 4,74,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT