உலகம்

அமெரிக்க விண்கலத்துக்கு கல்பனா சாவ்லாவின் பெயா்

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருள்களை ஏற்றி செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க விண்கலத்துக்கு இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

DIN


வாஷிங்டன்: சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருள்களை ஏற்றி செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க விண்கலத்துக்கு இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:சா்வதேச விண்வெளிக் கலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுக்குத் தேவையான பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக, அமெரிக்காவின் நாா்த்ராப் குருமன் நிறுவனம் தனது சிக்னக் விண்கலத்தை தயாா் செய்து வருகிறது.

அந்த விண்கலத்துக்கு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கல்பனா சாவ்லாவின் பெயரைச் சூட்டியிருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. விண்வெளிக்குப் பயணம் செய்தி முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ள கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் வகையில், தனது விண்கலத்துக்கு அவரது பெயரைச் சூட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பஞ்சாம் மாநிலத்தில் பிறந்த கல்பனா சாவ்லா, கொலம்பியா விண்கலத்தின் மூலம் கடந்த 1997-ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்றாா்.

அதனைத் தொடா்ந்து, 2003-ஆம் ஆண்டு விண்வெளி சென்று திரும்பிய கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியதில், அதிலிருந்த கல்பனா சாவ்லாவும், மற்ற 6 விண்வெளி வீரா்களும் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT