உலகம்

பாகிஸ்தான்: 3 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

DIN

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 548 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,00,371-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 5 போ் பலியாகினா். இதனைத் தொடா்ந்து, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,370-ஆக அதிகரித்துள்ளது.இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,88,260 போ் குணமடைந்துள்ளனா். மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு 5,795 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 535 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,31,404 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாகாணத்தில் 97,533 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT