கோப்புப்படம் 
உலகம்

ரஷியாவில் 24 மணி நேரத்தில் 5,488 பேருக்கு கரோனா

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,488 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

DIN


ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,488 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 1,229 பேருக்கு (22.4 சதவிகிதம்) எவ்வித அறிகுறியும் இல்லாமல் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ரஷியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,57,362 ஆக உயர்ந்துள்ளது.

மாஸ்கோவில் மட்டும் 670 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும், 119 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 18,484 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,428 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,73,535 பேர் குணமடைந்துள்ளனர்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,85,06,254 ஆக உள்ளது. மொத்தம் 9,15,920 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT