முகப்பு
உலகம்

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 66,76,601 ஆக உயர்வு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 707 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 66,76,601 ஆக உயர்வு
பகிர்:

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 707 பேர் உயிரிழந்தனர். இதனால் நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1 லட்சத்து 98 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39,282 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 66,76,601-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 707 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,98,128 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்கு 25,28,119 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர், இதுவரை 39,50,354 பேர் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர், 

நாட்டிலேயே அதிகபட்சமாக கலிஃபோா்னியா மாகாணத்தில் 7,59,184 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது, 14,333 பேர் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக டெக்ஸாஸில் 6,89,048 பேரும், புளோரிடாவில் 6,61,571 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பலி எண்ணிக்கையை பொறுத்தவரை நியூயார்க் மாகாணம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 33,116 பேர் உயிரிழந்துள்ளனர், 4,76,890    பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 
 

முழு கட்டுரையைப் படிக்க →