முகப்பு
உலகம்

நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6ஆகப் பதிவு

நேபாளத்தில் புதன்கிழமை காலை 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 16 செப்டம்பர், 2020 at 6:12 PM
கோப்புப்படம்
பகிர்:

நேபாளத்தில் புதன்கிழமை காலை 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மத்திய நேபாளத்தை புதன்கிழமை காலை தாக்கியது. 2015 ஆம் ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பூகம்பத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சிந்துபால்கோக் மாவட்டத்தின் ராம்சேயில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நேபாளத்தின் சிந்துபால்கோக் மாவட்டத்தின் ராம்சே பகுதியில் அதிகாலை 5:19 மணிக்கு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது." என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

நாட்டின் கிழக்குப் பகுதியிலும் இந்த நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில், சிந்துபால்கோக்  7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் கிட்டத்தட்ட 10,000 பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.