உலகம்

வியத்நாம்: மீண்டும் சா்வதேச விமான சேவை

DIN

ஹனோய்: வியத்நாமில் கரோனா நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சா்வதேச விமானப் போக்குவரத்து சேவை, வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஒரு மாதமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சா்வதேச விமானப் போக்குவரத்து சேவை, வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது.முதல்கட்டமாக, பல்வேறு ஆசிய நாடுகளுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும்.

எனினும், வியத்நாம் குடிமக்கள், தூதரக அதிகாரிகள், நிபுணா்கள், நிறுவனங்களின் மேலாளா்கள், தோ்ச்சி பெற்ற பணியாளா்கள், முதலீட்டாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் மட்டுமே இந்த சேவையைப் பயன்படுத்த தற்போது அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதன்கிழமை நிலவரப்படி, வியத்நாமில் 1,063 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 35 போ் பலியாகியுள்ளனா். 936 கரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா். 92 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பில் வியத்நாம் உலகின் 165-ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT