முகப்பு
உலகம்

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,232 பேருக்கு கரோனா; மேலும் 160 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,232 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 160 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

Updated On : 29 செப்டம்பர், 2020 at 3:18 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:57 PM

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,232 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 160 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 8,232 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. 

இதையடுத்து, மொத்த பாதிப்பு 11,67,805 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 160 பேர் உள்பட இதுவரை 20,545 பேர் உயிரிழந்துள்ளனர். 

Advertisement

அதேநேரத்தில் தற்போதுவரை 9,52,399 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 1,94,861 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ரஷியாவில் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், ஒருநாள் கரோனா பாதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.