முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 10,513; பலி 224 ஆக உயர்ந்தது!

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 742 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

Updated On : 23 ஏப்ரல், 2020 at 1:41 PM
பகிர்:

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 742 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு கூறியதாவது:

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 742 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,513 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று உயிரிழப்பு 224 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று இதுவரை 2,337 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். எனினும், 60 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும், பஞ்சாபில் 4,590 பேர், சிந்துவில் 3373, கைபர் பக்துன்க்வாவில் 1453, பலுசிஸ்தானில் 552, கில்கிட்-பால்டிஸ்தானில் 290, இஸ்லாமாபாத்தில் 204 மற்றும் ஆசாத் காஷ்மீரில் 51 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.