கரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்குகிறது
உலகளவில் கரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 7,984ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் கரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 7,984ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய புதிய வகை கரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, ரஷியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 165 நாடுகளுக்குப் பரவியுள்ளது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,98,214 ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு அடுத்து கரோனாவால் அதிகம் போ் உயிரிழந்த நாடுகளில் பட்டியலில் இத்தாலி முதலில் உள்ளது.
Advertisement
கரோனாவால் சீனாவில் 3,237, இத்தாலியில் 2,503, ஈரானில் 988, ஸ்பெயினில் 533 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 82,762 பேர் குணமடைந்துள்ளனர்.