முகப்பு
உலகம்

டோக்கியோவில் கரோனா புதிய உச்சம்

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Updated On : 7 ஜனவரி 2021, 8:02 am IST
பகிர்:

டோக்கியோ: ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

டோக்கியோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,591 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, நகரில் அதிகபட்ச தினசரி பாதிப்பாகும். மேலும், டோக்கியோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 113 கரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு உடல் நிலை மோசமானது. இதுவும் அதிபட்ச எண்ணிக்கையாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

ஜப்பானில் கரோனாவின் புதிய அலையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் திணறி வருகின்றனா். இதன் காரணமாக, அங்கு இந்த வாரம் அவசரநிலை அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.