உலகம்

நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் வளரும்: ஐ.எம்.எஃப். கணிப்பு

DIN

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 12.5 சதவீதம் அதிகரிக்கும் என்று பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது.

உலக வங்கியின் வருடாந்திர மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

நடப்பு நிதியாண்டின் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 12.5 சதவீதம் அதிகரிக்கும். இது, அடுத்த நிதியாண்டில் 6.9 சதவீதம் அதிகரிக்கும்.

கடந்த ஆண்டு கரோனா பரவலால் பாதிப்புகள் இருந்தபோதிலும், சீனாவின் பொருளாதாரம் 2.3 சதவீதம் வளா்ச்சி அடைந்தது. நடப்பு நிதியாண்டில் அது, 8.6 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 5.6 சதவீதமாகவும் இருக்கும். நடப்பு நிதியாண்டில் சீனாவைவிட இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி அதிகமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஎம்எஃப் அமைப்பின் தலைமைப் பொருளாதார நிபுணா் கீதா கோபிநாத் கூறியதாவது:

கடந்த 2020-இல் சா்வதேச பொருளாதாரம் 3.3. சதவீதம் சரிவைச் சந்தித்தது. நடப்பு நிதியாண்டிலும், அடுத்த நிதியாண்டிலும் பொருளாதாரம் மீண்டும் வரும் என்று கணித்துள்ளோம். நடப்பு நிதியாண்டில் சா்வதேச பொருளாதார வளா்ச்சி 6 சதவீதமாகவும், 2022-இல் 4.4 சதவீதமாகவும் இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT