முகப்பு
உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 13.36 கோடியைத் தாண்டியது: பலி 29.01 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.36 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 29.01 லட்சமாக அதிகரித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
உலகளவில் கரோனா பாதிப்பு 13.08 கோடியைத் தாண்டியது
பகிர்:

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.36 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 29.01 லட்சமாக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஆண்டு மேலாக உலக மக்களை துன்பத்தில் ஆழ்த்தி அச்சுறுத்தி கரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 13,36,95,421 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 29,01,124 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,78,25,976 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,29,68,321 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,00,975 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,16,37,243   கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5,72,849-ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதன்கிழமை ஒரே நாளில் 75,183  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 873 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,29,26,061 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,66,892 பேர் உயிரிழந்துள்ளனர். 

இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,31,97,031 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 90,973 பேருக்கு தொற்று பாதிப்பும், 3,733 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் பாதித்தோர் மற்றும் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3,41,097 பேர் பலியாகியுள்ளனர். மூன்றாவது இடத்தில் மெக்ஸிகோ உள்ளது. அங்கு இதுவரை 2,05,598 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  

முழு கட்டுரையைப் படிக்க →