உலகம்

துணை அதிபர் இல்லத்தில் குடியேறினார் கமலா ஹாரிஸ்

DIN

அமெரிக்க துணை அதிபராக பதவியேற்று இரண்டு மாதங்களுக்குப் பின்னர் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ துணை அதிபர் இல்லத்தில் குடியேறினார். 

அமெரிக்காவின் கடற்படை ஆய்வகத்திற்கு அருகில் வாஷிங்டனின் மாசசூசெட்ஸ் அவென்யூவில் உள்ள அதிகாரப்பூர்வ துணை அதிபர் இல்லத்திற்கு தனது கணவர் டக் எம்ஹாஃப் உடன் கமலா ஹாரிஸ் புதன்கிழமை குடியேறினார். 

19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த துணை அதிபர் இல்லமும் வெள்ளை மாளிகை என்றே அழைக்கப்படுகிறது. 

துணை அதிபர் இல்லத்தில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றதால் கடந்த இரு மாதங்கள் கமலா ஹாரிஸ் பென்சில்வேனியா அவென்யூவில் உள்ள விருந்தினர் இல்லமான பிளேயர் ஹவுஸில் தற்காலிகமாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT