உலகம்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார்

DIN

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார். அவருக்கு வயது 99.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் காலமானார். தனது வின்ஸ்டர் கேட்சில் அரசு மாளிகையில் இளவரசர் பிலிப்பின் உயிர் பிரிந்ததாக பக்கிங்காம் அரண்மனையிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் பிலிப்பின் மறைவு குறித்து இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் சார்லஸின் தந்தையான பிலிப், வயோதிகம் காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். மேலும், இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் பிலிப் என்பது குறிப்பிடத்தக்கது.

இளவரசர் பிலிப்பின்  மறைவால் ஏற்பட்ட துக்கத்தில் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் இங்கிலாந்து அரச குடும்பமும் இணைகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT