முகப்பு
உலகம்

பிரேசிலில் கரோனா பலி 3.50 லட்சத்தைக் கடந்தது!

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,616 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,616 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு கரோனா பலி 3 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 71,832 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 13,445,006 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், தொற்று பாதித்த 2,616 பேர் உயிரிழந்ததையடுத்து அங்கு மொத்த பலி 351,334 ஆக அதிகரித்துள்ளது. 

Advertisement

கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 

பிரேசிலில் கடந்த ஜனவரி 17 முதல் தற்போது வரை 2.95 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments