முகப்பு
உலகம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கணிதவியல் நிபுணரின் சடலம் நியூ யார்க்கில் மீட்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 31 வயது கணிதவியல் நிபுணரின் உடல் ஹூட்சன் நதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

Updated On : 16 ஏப்ரல், 2021 at 1:14 PM
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கணிதவியல் நிபுணரின் சடலம் நியூ யார்க்கில் மீட்பு
பகிர்:


நியூ யார்க்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 31 வயது கணிதவியல் நிபுணரின் உடல் ஹூட்சன் நதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

கிரிப்டோகரன்சி மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வந்த ஷவ்ரோ பிஸ்வாஸ், சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து நியூ யார்க் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Advertisement

ஷவ்ரோ பிஸ்வாஸ் மரணம் குறித்து அவரதுசகோதரர் கூறுகையில், இந்தச் செய்தியால் எனது ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்து விட்டோம். அவரது மன நலப் பிரச்னையிலிருந்து வெளியே வர நாங்கள் கடுமையாக போராடினோம். அவர் மிகவும் நல்லவர். மிகுந்த புத்திசாலி. 

கடந்த சில காலமாக அவர் ஏதோ பிரச்னையில் இருந்தார். எதையும் குடும்பத்தாரிடம் கூற மாட்டார். யாருடனாவது பிரச்னையை பேசுமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறத்தி வந்தோம். ஆனால் அனைத்தும் பலனின்றி போய்விட்டது என்கிறார் அவரது சகோதரர் பிப்ரோஜித்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.