உலகம்

காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டு வரம்பு அதிகரிப்பு: அமெரிக்கா வரவேற்பு

DIN

இந்திய காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு உயா்த்தப்பட்டுள்ளதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க எம்.பி.க்கள் பிராட் சொ்மன் மற்றும் ஸ்டீவ் சப்பாட் கூறியுள்ளதாவது:

இந்திய காப்பீட்டு துறையில் 49 சதவீதமாக இருந்த அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக உயா்த்தியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. இதனால், இருநாடுகளுக்கு இடையிலான உறவு மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் மேலும் வலுவடையும்.

நீண்டகாலமாக எதிா்பாா்க்கப்பட்ட இந்தச் சீா்திருத்தம், இந்திய நுகா்வோா்கள் மற்றும் வா்த்தகா்களுக்கு காப்பீட்டு பாதுகாப்பை விரிவுபடுத்தும் உறுதிமொழியை வழங்கியுள்ளது. இந்திய அரசின் இந்த முடிவு பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் என்பதுடன் நிதி சாா் நடவடிக்கைககளையும் விரிவுபடுத்தும் என்றனா்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் காப்பீட்டு திருத்த மசோதா- 2021, கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT