முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் 16 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,976 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,50,158ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம், கரோனாவுக்கு 112 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 16,094ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 4,181 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,54,956ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

கடந்த 24 மணிநேரத்தில் 65,279 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  தற்போது 79,108 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 4,149 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments