முகப்பு
உலகம்

பிரேசிலில் ஒருநாளில் 3,321 பேர் கரோனாவுக்குப் பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,321 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
பகிர்:

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,321 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி பிரேசிலில் புதிதாக 69,381 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 14,043,076 ஆக அதிகரித்துள்ளது. 

Advertisement

மேலும், ஒரேநாளில் தொற்று பாதித்த 3,321 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,78,003 ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓரிரு வாரங்களாக பிரேசிலில் கரோனா பலி நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments