பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி, 12 பேர் காயம்
தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள ஒரு சொகுசு உணவகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள ஒரு சொகுசு உணவகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குவெட்டாவில் உள்ள செரீனா உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் புதன்கிழமை இரவு இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. குண்டுவெடிப்புக்குப் பின்னர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் தீப்பிடித்தன.
சீன தூதர் உள்பட சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள் உணவகத்தில் தங்கியிருந்ததாகவும், குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் சீன தூதர் உணவகத்தில் இல்லை என்று கூறப்படுகிறது.
Advertisement
ஆரம்பக்கட்ட விசாரணையில் ஒரு காருக்குள் குண்டுவெடிப்பு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.