உலகம்

பிரேசிலில் மேலும் 3,086 பேர் பலி; புதிதாக 72,140 பேருக்கு தொற்று உறுதி

DIN

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,086 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி பிரேசிலில் புதிதாக 72,140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 14,441,563 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், ஒரேநாளில் தொற்று பாதித்த 3,086 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 395,022 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் இறுதிக்குள் நாட்டில் பலி 4 லட்சத்தை எட்டும் என்று கூறப்படுகிறது. 

கரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பிரேசிலில் கரோனா பலி அதிகமாக உள்ளது.

கடந்த ஓரிரு வாரங்களாக பிரேசிலில் கரோனா பலி நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது. 

மேலும் அந்நாட்டில் 29,554,723 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 13,127,599 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது, 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

SCROLL FOR NEXT