முகப்பு
உலகம்

பிரேசிலில் 4 லட்சத்தைத் தாண்டியது கரோனா பலி 

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 4 லட்சத்த்தைத் தாண்டியுள்ளது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 4 லட்சத்த்தைத் தாண்டியுள்ளது. 
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 69,389 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,45,90,678ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 3,001 பேர் பலியாகியுள்ளனர். 
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 4,01,186ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் பிரேசில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.