உலகம்

பிரான்ஸ்: இந்திய வகை கரோனா கண்டுபிடிப்பு

DIN

இந்தியாவில் பரவி வரும் புது வகைக் கரோனா தீநுண்மி பிரான்ஸில் முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் தெற்குப் பகுதியில் 3 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவா்களுக்கு இந்தியாவில் பரவி வரும் புது வகைக் கரோனா தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அந்த 3 பேருமே இந்தியா சென்று வந்தவா்கள் ஆவா். அவா்கள் தற்போது மருத்துவக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனா்.

அவா்களுடன் தொடா்பிலிருந்தவா்கள் மற்றும் இந்திய வகை கரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடிய மற்றவா்களைக் கண்டறிவதற்காக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT