முகப்பு
உலகம்

வட கலிபோர்னியாவை சூழும் காட்டுத்தீ...அபாயத்தில் மக்கள்

வட கலிபோர்னியா பகுதியை கடந்த மூன்று வார காலமாக காட்டுத் தீ சுட்டெரித்துவருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

வட கலிபோர்னியா பகுதியை கடந்த மூன்று வார காலமாக காட்டுத் தீ சுட்டெரித்துவருகிறது.

கடந்த மூன்று வார காலமாக, வட கலிபோர்னியாவின் மலைப்பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரத்தில் காட்டுத் தீ தொடர்ந்து பரவிவருகிறது. இதன் காரணமாக, பழமைவாய்ந்த கட்டிடம் உள்பட நகரின் பெரும்பாலான பகுதிகள் தீக்கிரையாகின.

அபாயமான வானிலை நிலவிவரும் நிலையில், புதிதாக உருவான காட்டுத் தீ வியாழக்கிழமை அன்று பல வீடுகளை தீக்கிரையாக்கின. இதனிடையே, தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த காட்டுத் தீ, 64 கிமீ வேகத்தில், விவசாயம் செய்யப்படும் வரட்சியான பகுதிகளுக்கு விரிவடைந்து கிரீன்வில் பகுதியில் உள்ள வடக்கு சியரா நெவாடாவில் கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது.

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடங்கள், எரிவாயு நிலையம், விடுதி, மதுபான கடைகள் ஆகியவை தீக்கிரையாகின. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.