உலகம்

ஆப்கானிஸ்தான் : ராணுவத் தளபதியை மாற்றிய அதிபர் 

DIN

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் தலிபான்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. ஆப்கனின் 65% நிலப்பகுதிகளை கைப்பற்றிய  தலிபான்கள் தற்போது காபூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் இன்னும் 90 நாட்களில் ஆப்கானிஸ்தான் முற்றிலும் தலிபான்களிடம் சரணடையும் என அமெரிக்க உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்திருக்கிறது.

தொடர்ந்து தாக்குதல்களில் தோல்வியைச் சந்தித்து வரும் ஆப்கன் ராணுவம் மேற்கொண்டு சரியான பதிலடியை கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இதுவரை 9 மாகாணங்களை தலிபான்கள்  கைப்பற்றியதால் ஆத்திரம் அடைந்த அந்நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி ஆப்கனின் தற்போதைய ராணுவத் தளபதியான ஜெனெரல் வாலி முகமது  அஹமத்ஸாயை   பதவி நீக்கம் செய்து விட்டு புதிய ராணுவத் தளபதியாக ஆப்கன் சிறப்பு தாக்குதல்கள் படையின் தளபதியாக இருந்த ஹிபதுல்லா அலிசாயை  நியமித்திருக்கிறார். 

இருப்பினும் தலிபான்களே ஆப்கனில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT