ஐஸ்கிரீம்க்காக ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட் 
உலகம்

ஹெலிகாப்டரை தரையிறக்கி ஐஸ்கிரீம் வாங்க சென்ற பைலட்டால் பரபரப்பு

கனடாவில் ஐஸ்கிரீம் கேக் வாங்குவதற்காக திடீரென நகரின் மத்தியில் ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்டிற்கு நீதிமன்றத்தில் ஆஜராக காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

DIN

கனடாவில் ஐஸ்கிரீம் கேக் வாங்குவதற்காக திடீரென நகரின் மத்தியில் ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்டிற்கு நீதிமன்றத்தில் ஆஜராக காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கனடா நாட்டின் டிஸ்டேல் என்ற நகரில் வியாழக்கிழமை ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையிறங்கியது. மருத்துவ ஆம்புலன்ஸ் வண்ணம் பூசப்பட்ட ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவசர மருத்துவ உதவிக்காக முன் அறிவிப்பின்றி ஹெலிகாப்டர் தரையிறங்கியிருக்கலாம் என கருதிய காவல் அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் 34 வயதான ஹெலிகாப்டர் பைலட் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பி அதனை வாங்குவதற்காக முன்னறிவிப்பின்றி ஹெலிகாப்டரை தரையிறக்கியது தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து பைலட் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர். 

கனடாவில் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக பைலட் திடீரென ஹெலிகாப்டரை தரையிறக்கிய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT