முகப்பு
உலகம்

அடுத்தது ஆப்கானிஸ்தான் தலைநகர்? காபூலிலிருந்து 11 கி.மீ. தொலைவில் தலிபான்கள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் தெற்கேவுள்ள மாகாணத்தை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் தெற்கேவுள்ள மாகாணத்தை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காபூலுக்கு 50 கி.மீ. தொலைவிலுள்ள லோகார் மாகாணத் தலைநகர் புல்-ஏ-ஆலம் நகரை தலிபான்கள் வெள்ளிக்கிழமை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த நிலையில் லோகார் மாகாணம் முழுவதுமாகக் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மாகாண அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காபூலுக்கு 11 கி.மீ. தொலைவிலுள்ள சார் அஸ்யாப் மாவட்டத்தை தலிபான்கள் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் 4-வது பெரிய நகரமான மாஸார்-இ-ஷரிப் நகர் மீது பல்வேறு திசைகளிலிருந்து தலிபான்கள் தாக்குதல் நடத்தியதாக பால்க் மாகாண செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.