துருக்கி வெள்ளப் பெருக்கு - பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு 
உலகம்

துருக்கி வெள்ளப் பெருக்கு - பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு

துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஏற்பட்ட கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு முன்னதாக 44 பேர் இறந்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்திருக்கிறது

DIN

துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஏற்பட்ட கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு முன்னதாக 44 பேர் இறந்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்திருக்கிறது. மாயமான 47 பேரை தேடும் பணியும் தொடர்ந்து வருகிறது.

இதில் காஸ்தமோனு பகுதியில் 62 பேரும் , சினோப் பகுதியில் 11 பேரும் மற்றும் பார்ட்டின் பகுதியில் ஒருவரும் இறந்திருப்பதாகவும் , அப்பகுதிகளைச் சேர்ந்த 2,440 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக பாதிக்கப்பட்ட பகுதிகளில்   19 ஹெலிகாப்டர்கள் , 17 படகுகளுடன் 4,680 மீட்புப்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள் தற்போது மேலும் இரண்டு கப்பல்கள் மக்களின் உடமைகளை மீட்க  அனுப்பப்பட்டிருக்கிறது.

கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு  கட்டடங்கள், பாலங்கள் மற்றும் கார்கள் சேதாரமாகியிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

SCROLL FOR NEXT