உலகம்

மலேசியாவின் அடுத்த பிரதமர் யார்?

DIN

மலேசியாவில் பிரதமர் முகைதீன் யாசின் தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில் முன்னாள் துணை பிரதமரான இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் புதிய பிரதமராக பஹவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியாவில் கூட்டணிக் கட்சியான ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பின் ஆதரவில் பிரதமர் முகைதீன் யாசின் ஆட்சி செய்து வந்தார். இந்நிலையில் அக்கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகைதீன் யாசினுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்ற நிலையில் அவர் பிரதமராக தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட முகைதீன் யாசின் போதிய ஆதரவின்மையால் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் துணை பிரதமரான இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 61 வயதான இஸ்மாயில் சாப்ரி மொத்தம் உள்ள 222 உறுப்பினர்களில் 114 பேரின் ஆதரவைப் பெற்றுள்ள நிலையில் விரைவில் ஆட்சியமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT